கண்களை மூடிக்கொண்டு எதிரிலுள்ள பொருள்களின் பெயரைக் கூறும் மாணவி

கண்களை மூடிக்கொண்டு எதிரிலுள்ள பொருள்களின் பெயரைக் கூறுகிறார் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி தீட்சிதா.
கண்களை மூடிக்கொண்டு எதிரிலுள்ள பொருள்களின் பெயரைக் கூறும் மாணவி

கண்களை மூடிக்கொண்டு எதிரிலுள்ள பொருள்களின் பெயரைக் கூறுகிறார் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி தீட்சிதா.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மதியழகன். இவரது மகள் உமா - பாலகுமார் தம்பதியின் மகள் தீட்சிதா (13). இவர் ஆத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தீட்சிதா, தனது இரு கண்களையும் கைக்குட்டை மற்றும் கருப்புத்துணியால் மூடிக்கொண்டு எதிரில் உள்ள பொருள்களின் பெயரைக் கூறுகிறார். மேலும் எதிரில் உள்ளோரின் ஆடைகளின் நிறம், அதில் உள்ள டிசைன்கள் குறித்தும் கூறுகிறார். கரும்பலகையில் தீட்டப்படும் ஓவியங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு வண்ணப் பென்சில்களால் சரியாக வண்ணம் தீட்டுகிறார்.

இதுகுறித்து மாணவி தீட்சிதா கூறியதாவது:
6-ஆம் வகுப்பு படிக்கும்போது பிரைன்பவர் என்ற பயிற்சி சேலத்தில் மாதம் ஒருமுறை நடைபெற்றது. அதில் பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்தி பங்கேற்றேன். என்னுடன் அதிகம் பேர் பயிற்சியில் பங்கேற்றனர். ஆனால் பிறருக்கு அந்தத் திறன் சரிவரக் கிடைக்கவில்லை. பயிற்சியில் சேர்ந்த அனைவருக்கும் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் திறமை கிடைப்பதில்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. கண்களை மூடிக்கொண்டு பொருள்களை கூறும் ஆற்றல் எனக்குக் கடவுள் கொடுத்த வரம் என்றே நினைக்கின்றேன்.

ஆனால் அதனை அதிகப்படுத்தியது பயிற்சிதான். கடந்த இரண்டு ஆண்களுக்கு முன்பு பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பயிற்சி பெறவில்லை.

சுயமாகப் பயிற்சி எடுக்கவும் இல்லை. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், ஓர் அறையில் இருந்து கொண்டு மற்றொரு அறையில் இருக்கும் பொருள்களை கூறமுடியும். இனி அதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com