கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 இதில் பேச்சாளர் குறிஞ்சி சேகர் பேசுகையில், தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 4,22,961 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலங்கள் மற்றும் கடைகள், வீடுகள் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது.
 எனவே பக்தர்களிடம் இருந்து பெறும் தரிசனக் கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
 கேரளத்தில் கோயில்களில் இலவச தரிசனம் சாத்தியமாகிறது. அதுபோல தமிழகத்திலும் பக்தர்கள் நலன் கருதி இலவச தரிசன முறையைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
 ஆத்தூரில்...
 ஆத்தூரில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கோயில் சொத்து கோயிலுக்கே எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 ஓமலூரில்...
 ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இதில் ஆலய தரிசனக் கட்டண முறையை ரத்து செய்யக்கோரியும், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com