கோரைப் பாய் உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

கோரைப் பாய் உற்பத்திக்கு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

கோரைப் பாய் உற்பத்திக்கு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
 கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது.
 ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு உணவகங்களில் விலை ஏற்றப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. உணவு தயாரிக்கும் மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வழிமுறைகளையும் கூறியது. இருந்தும் பல உணவகங்களில் விலையேற்றத்துடன் உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அடித்தட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை மாநில அரசு தடுக்க வேண்டும். மத்திய அரசு 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. ஆனால் இதை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு முறையாகப் பயிற்சிகள் கொடுக்கவில்லை. ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், மதுவுக்கு ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்கும்போது, ஜவுளிக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது. 10 நாள்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை மத்திய, மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
 இதேபோன்று, கோரைப் பாய், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளாகும். இதைத் தயாரிப்பவர்கள் பெரிய தொழில் அதிபர்கள் கிடையாது. இதற்கு ஜிஎஸ்டி வரி விதித்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இதற்கு வரி விலக்கு அளித்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை காக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com