தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ. 1000 பரிசு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் க.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைகளுக்கு பணமுடிப்பு வழங்கும் விழா,

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் க.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைகளுக்கு பணமுடிப்பு வழங்கும் விழா, டை பெல்ட் வழங்கும் விழா என முப்பெரும்விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கெங்கவல்லி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாசுகி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், அனைத்து மாணவர்களுக்கும் தலா 60 ரூபாய் மதிப்புள்ள டை மற்றும் பெல்ட்டுகளை மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா வழங்கினார். பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேர்ந்த இருகுழந்தைகளுக்கும் தலா ரூ. ஆயிரம் ரூபாய் வீதம் தலைமையாசிரியர் சார்பில், அவர்களது பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. ஆசிரியை தனம் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுவினர், அன்னையர் குழுவினர், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com