பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாநகர மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகர மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பா.செல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மாரி சக்ரவர்த்தி, வசந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் சிவகுமார், பொதுச் செயலாளர் ராம்குமார், மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பா.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது
 தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடையை மூடி பூரண
 மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போரட்டம் நடத்தப்பட உள்ளது.
 மேலும் தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை. அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்காலத்தில் நிலையான வலுவான ஆட்சியை பாஜக கொடுக்கும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com