பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 9 வரை சிறப்புத் தேர்வு

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் எஸ்.லீலா தெரிவித்தார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் எஸ்.லீலா தெரிவித்தார்.
 இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் 15-இல் வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் 40 ஆயிரம் மதிப்பெண் பட்டியல் தொகுப்புச் சான்றிதழ்கள், தாற்காலிக பட்டச் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய பின்னர், அவர் கூறியதாவது:-
 அண்மையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் நலன்கருதி, துணைத் தேர்வுகள் ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேலம், நாமக்கல்,தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான மையங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
 பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பயின்று, நிலுவைத்தாள்கள் (அரியர்) வைத்திருப்போர் பயனடையும் வகையில், அவர்களுக்கான சிறப்புத் தேர்வு வரும் ஜூலை 27-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெற உள்ளது.
 இதேபோன்று, ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) படிப்பு பயின்று நிலுவைத் தாள் வைத்திருப்போருக்கான தேர்வு ஜூலை 25, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான வாய்மொழித் தேர்வு ஜூலை 31-இல் நடைபெறும். இந்தத் தேர்வுகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை அலுவலகத்தில் நடைபெறும் என்றார்.
 துணைத் தேர்வாணையர் ஜெ.செந்தில்வேல்முருகன், துணைப் பதிவாளர் பி.கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com