டெங்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு மூலம் சிகிச்சை;  துணை இயக்குநர்

டெங்கு காய்ச்சலுக்கென அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கென அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
 சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருப்பின் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் அல்லது தகுதியுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
 இதைத் தவிர மருந்துக் கடைகளில் தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்ளுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றுதல், சிறுநீர்க் குறைவாக வெளியேறுதல், மலம் கருப்பு நிறத்தில் இருப்பது போன்ற மேற்கண்ட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பின் 30 நிமிடத்துகுள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 மேலும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
 பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைத்து வாரம் ஒருமுறை சுத்தம் செய்து கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாதுகாக்கவும், வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டை, டயர், பயன்படுத்தப்படாத உரல் ஆகியவற்றை கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு இலவச தொலைபேசி எண் 104 அழைக்கவும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com