கெங்கவல்லியில் இன்று சிறப்புத் தேர்வு
By தம்மம்பட்டி, | Published on : 19th June 2017 09:23 AM | அ+அ அ- |
கெங்கவல்லியில் 6-ஆம் வகுப்பு முதல் தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க தேர்வு செய்யப்படுவதற்கான சிறப்புத் தேர்வு திங்கள்கிழமை (ஜூன் 19) கெங்கவல்லியில் நடைபெறுகிறது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களில் முதல் இடங்களைப் பிடித்த சுமார் 60 மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்வாகும் ஒரே ஒரு மாணவருக்கு, அரசு செலவில், நடப்பு கல்வியாண்டு முதல் (6-ஆம் வகுப்பு), அவரது பெற்றோர் விரும்பும் தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையில் தனியார் பள்ளியில் அரசு செலவில் அந்த மாணவர் படிப்பார். இந்தத் தேர்வை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.