கோடைகாலத்தையொட்டி கிணற்றை தூர்வாரிய சங்ககிரி பேரூராட்சி: பொதுமக்கள் பாராட்டு

கோடைகாலத்தையொட்டி சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில்,

கோடைகாலத்தையொட்டி சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில், நகர் பகுதியில் உள்ள எட்டு ராட்டின கிணற்றை தூர்வாரி தண்ணீர் வழங்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
 பழைய எடப்பாடி சாலையில் உள்ள எட்டு ராட்டினக் கிணற்றில் நீர் ஊற்று இருந்து வருவதால் பேரூராட்சி நிர்வாகம், கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை செப்பனிட்டு தண்ணீர்க் குழாய்களை அமைத்தனர். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் காவிரி நீர் வாரத்தில் ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் பொதுமக்கள் இந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்க் குழாய்களின் மூலம் தேர்வீதி, அக்ரஹார வீதி, நல்லப்பநாயக்கன் தெரு, பழைய எடப்பாடி சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மிதிவண்டிகள், இரு சக்கரவாகனத்தில் தண்ணீரைப் பிடித்துச் செல்கின்றனர்.
 இக் கிணற்றை தூர்வாரி குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டதற்கு, தமிழக அரசு, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 பொதுமக்களின் கோரிக்கை...
 பேரூராட்சி நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கிணற்றை தூர்வாரி, தண்ணீர்க் குழாய் அமைத்துள்ளது. நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் அப்பகுதியில் உள்ளவர்கள் குப்பைகளைக் கொட்டுவதால் கழிவு நீர்க் கால்வாயில் விழுந்து அடைத்து கொள்கிறது.
 மேலும் நெகிழிப் பைகள் காற்றில் பறந்து மீண்டும் கிணற்றுக்குள் விழுகின்றன. எனவே அப்பகுதியில் குப்பைத் தொட்டி வைக்கவும்.
 அப்பகுதியில் உள்ளவர்களிடம் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க அறிவுறுத்துமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com