பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடையைத் தடுக்க வேண்டும்: காங்கிரஸ் தீர்மானம்

பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டாய நன்கொடையைத் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டாய நன்கொடையைத் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 சேலம் மாநகரத் தலைவராக ஜெயப்பிரகாஷ், கிழக்கு மாவட்டத் தலைவராக அர்த்தநாரி, மேற்கு மாவட்டத் தலைவராக முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் பதவி ஏற்பு விழா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முள்ளுவாடி கேட் காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் மோகன் குமாரமங்கலம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அழகுவேல் முன்னிலை வகித்தார். புதிய மேற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு ஏற்று கொண்ட முருகனுக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்குத் தரமான சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடையைத் தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
 நிகழ்ச்சியில் பொதுச் செயலர்கள் காந்தி, வேலு, வெங்கடாசலம், சேலம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூபதி, மகளிர் அணி நிர்வாகிகள் வளர்மதி, அங்கம்மாள், சேவாதள நிர்வாகிகள் ரவிக்குமார், பாண்டு, வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் சாமிநாதன், ரகு, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com