தாரமங்கலத்தில் திமுக பொதுக் கூட்டம்
By ஓமலூர், | Published on : 20th June 2017 09:49 AM | அ+அ அ- |
தாரமங்கலத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ். அம்மாசி முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். இதில், அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி பங்கேற்று 2,610 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் கோபால், துணைச் செயலாளர் சுந்தரம், மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.