தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
 செந்தாரப்பட்டி, கொண்டயம் பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம், வாழக் கோம்பை, கோனேரிப்பட்டி, மண்மலை, தெடாவூர் உள்ளிட்ட இடங்களில் இம்முகாம் நடைபெற்றது.
 இதில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் திரவக் கரைசலும், ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் ஓஆர்எஸ் கரைசலும், ஜிங்க் மாத்திரைகளும் வழங்கிட வேண்டும் என்று கெங்கவல்லி வட்டாரத் தலைமை அரசு மருத்துவர் வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com