ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆத்தூரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆத்தூரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
 சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமை வகித்தார். விழாவில் ஆத்தூர் ஸ்ரீவெள்ளப்பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜையும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ரொட்டியும் வழங்கப்பட்டது. பின்னர், மஞ்சினி காந்தி முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.முருகேசன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் தலைவர் சக்ரவர்த்தி, மாவட்டச் செயலாளர் வி.குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.திருஞானம், அன்புநிதி, நரசிங்கபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கோவிந்தன், தலைவாசல் வடக்கு வட்டாரத் தலைவர் ஏ.பி.ராமச்சந்திரன், ஜோதிபாசு, ஆத்தூர் தெற்கு வட்டார தலைவர் சோமசுந்தரம், முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஆர்.எஸ்.சீனிவாசன், ஆத்தூர் நகர தலைவர் திலீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com