எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிறந்தது முதல் 18 வயதுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மேற்கொள்ளுதல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது :சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி 2017 - 18-ஆம் ஆண்டுக்கு பிறந்தது முதல் 18 வயது கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சேலம் மாவட்டத்தில் இந்த மருத்துவ முகாம் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை 21 முகாம்கள் நடைபெற உள்ளன.
மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், காது கேளாத மாணவர்களைக் கண்டறிந்து அடையாள அட்டை வழங்குதல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேவைப்படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள ஏதுவாக காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.
முகாமில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பொது மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் பங்கேற்கவுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் முகாமானது அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி, மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com