சங்ககிரியில் மாணிக்க வாசகர் குருபூஜை

சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அருள்மிகு மாணிக்கவாசகர் குருபூஜையையொட்டி சிறப்புப் பூஜைகள் சௌந்தரநாயகி உடனமர்

சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அருள்மிகு மாணிக்கவாசகர் குருபூஜையையொட்டி சிறப்புப் பூஜைகள் சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மாணிக்கவாசகர் பிறந்த நாளையொட்டி , கோயில் வளாகத்தில் உள்ள மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு சோமேஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டகளையின் சார்பில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் மற்றும் சிவபுராணப் பாடல்களை பாடினர். இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com