சேலத்தில் 53,401 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 53,401 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 53,401 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
சேலம் சி.எஸ்.ஐ. பால ஞான இல்லத்தில் இந்திய மறுவாழ்வு ஆணையத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு குறித்த மாவட்ட மற்றும் வட்ட அளவில் அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது :
சேலம் மாவட்டத்தில் இந்திய மறுவாழ்வு ஆணையரகம் மூலம் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாவட்ட மற்றும் வட்ட அளவில் அலுவலர்களுக்கு பயிற்சி புதன்கிழமை (ஜூன் 28) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் 80 பேர் பங்கேற்க உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய அடையாள அட்டை 53,401 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நலவாரியத்தில் உறுப்பினர்களாக 29,470 பேர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2017 - 18-ஆம் நிதியாண்டில் 7,067 நபர்களுக்கு ரூ.12.72 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலமாக மறுவாழ்வு பணியாளர்களை கொண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் இல்லத்திற்கே சென்று மறுவாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்பு திட்டமாக முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவர்களுக்கென பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் 30 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் சார்பு நீதிபதி வி.ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.க.தங்கமணி, துணை இயக்குநர் (தொழுநோய்) கே.குமுதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.ரவிச்சந்திரன், துணைப் பேராசியர் கே.சம்பத்ராணி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் எஸ்.உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com