பேரணி தாமதமாக தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவியர் அவதி

சேலம் மாநகரக் காவல் துறை ஏற்பாடு செய்திருந்த சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி காலதாமதமாக தொடங்கியதால் மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் மாநகரக் காவல் துறை ஏற்பாடு செய்திருந்த சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி காலதாமதமாக தொடங்கியதால் மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாநகரக் காவல் துறை சார்பில் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சாரண, சாரணியர் மற்றும் தேசிய மாணவர் படை யினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த பேரணியை மாநகரக் காவல் துறை ஆணையர் சஞ்சய்குமார் தொடக்கி வைக்க இருந்ததால் அதற்கு முன்னரே மாணவர்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாணவர்கள் வரத்தொடங்கினர். சுமார் 9.30 மணிக்கு அனைத்து பள்ளி மாணவர்களும் பேரணி தொடங்குமிடமான அஸ்தம்பட்டி அருகே சிறை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குவிந்தனர்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணிக்குத் தயாராக இருந்த நிலையில் மாநகரக் காவல் துறை ஆணையர் சஞ்சய்குமார் அங்கு வரவில்லை. காலை மணி 10.30 ஆன நிலையில் காவல்துறை ஆணையர் வரமாட்டார் என்பதை உறுதி செய்த போலீஸார் உடனடியாக குற்றம், போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் மைதானத்திலேயே அமர்ந்தனர். தாங்கள் எடுத்து வந்த பதாகைகளை கொண்டு வெயிலின் தாக்கத்தை மறைத்தனர்.
மாணவர்கள் காத்திருப்பதை அறிந்த துணை ஆணையர் உடனடியாகப் பேரணி நடைபெறவிருந்த இடத்திற்கு விரைந்து வந்து கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சுமார் 10.35 மணியளவில் பேரணி கிளம்பியது. அஸ்தம்பட்டி ரவுண்டானா, காந்தி சாலை, ராமகிருஷ்ணா சாலை, சாரதா கல்லூரிச் சாலை வழியாக மீண்டும் பேரணி தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com