வீரக்கல்புதூர் பேரூராட்சியில் தீவிர சொத்துவரி வசூல்

வீரக்கல்புதூர் தேர்வு நிலை பேரூராட்சியில் வரி செலுத்தாதோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பேரூராட்சி செயல்அலுவலர் ர.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

வீரக்கல்புதூர் தேர்வு நிலை பேரூராட்சியில் வரி செலுத்தாதோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பேரூராட்சி செயல்அலுவலர் ர.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வீரக்கல்புதூர் பேரூராட்சிப் பகுதியில் சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டண வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வரி இனங்களை நிலுவையின்றி செலுத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இம்மாதம் இறுதிக்குள் வரி செலுத்தாதோர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும். .
 மேலும், பேரூராட்சியில் அனுமதியின்றி கள்ளத்தனமாக போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குடிநீர் இணைப்புகள் கண்டறிந்து துண்டிக்கப்பட்டன. பயனாளிகள் மீண்டும் முறைப்படி வைப்புத்தொகை செலுத்தி குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தியதன் மூலம் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com