ஆ.ரெட்டிபாளையத்தில் பள்ளிக் கட்டடம் கட்டித் தர கோரிக்கை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பழுதடைந்த

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆலத்தூர் ரெட்டிபாளையத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு அப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 53  மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியை, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்,  கடந்த 1961-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கட்டப்பட்ட கட்டடம் தற்போது பழுதடைந்துள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அக் கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறாமல் பூட்டப்பட்டுள்ளன.
கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இரண்டு வகுப்பறைகளிலும், 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 3 வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.
இரண்டு பிரிவுகளும் அருகருகில் உள்ளதால் மாணவ, மாணவியர் பாடங்களை சரிவர கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிகழாண்டு அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை, புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது லேசான மழை முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடம் தொடர்ந்து நாளுக்கு நாள் சேதமடைந்து வருகின்றன.
எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடங்களை கட்டித் தர வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com