குடிநீர் கோரி சாலை மறியல்

வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி கிராமத்தில் மேட்டூர் குடிநீர் விநியோகிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி கிராமத்தில் மேட்டூர் குடிநீர் விநியோகிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூட்டாத்துப்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு மேட்டூர் காவிரி நீர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தினந்தோறும் சீராக குடிநீர் விநியோகிக்காததால், மேட்டூர் குடிநீர் குழாயில் வால்வு பொருத்தப்பட்டுள்ள பகுதியில் கசியும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போதுஅந்த வால்வு குழியையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இதையடுத்து, சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரியும், குடிநீர் குழாய் வால்வு குழியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக் கோரியும், அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் அயோத்தியாப்பட்டணம்-பேளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கமலேஷ், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரேஸ்வரன் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com