குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம்

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி க.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி க.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் என்.டி.செல்வம் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் மாலைகள், கிரீடம் அணிவித்து மற்றும் மலர்க் கொத்துகள் கொடுத்து குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், பள்ளி மேலாண்மைக் குழுவின்  மீனாம்பிகா அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, நேரு படத்துக்கு குழந்தைகள் மாலை அணிவித்தனர். குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஆசிரியை தனம் நன்றி கூறினார். விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
வாழப்பாடியில்...
சேசன்சாவடி மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். ஆசிரியர் கோ.பெருமாள் வரவேற்றார். சேலம் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகி ஜீவநாராயணன், சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜவஹர்,  சாரல் கலைக்குழு பயிற்றுநர் ஆதிராஜன் ஆகியோர், மாணவ - மாணவியருக்கு இனிப்பு மற்றும் எழுதுப் பொருள்கள் வழங்கினர்.
பள்ளி நூலகத்துக்கு கிள்ளை மொழி மற்றும் மழலைக் காவியம் குழந்தை இலக்கிய நூல்கள் வழங்கப்பட்டன.
வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், சிறப்பாசிரியர் வெங்கடாஜம் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பொன்னாரம்பட்டி கமலாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காப்பக நிர்வாகி ஆதிராஜன் வரவேற்றார். காப்பக நல அலுவலர் முனைவர் ஜவஹர் தலைமை வகித்தார்.
வாழப்பாடி வட்டாட்சியர் பொன்னுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் கோகிலா, சிங்கிபுரம் ராம்கோ நிறுவன துணை பொது மேலாளர் சுப்பாராவ், அலுவலர்கள் சுரேஷ்குமார், முனியசாமி, வருவாய் ஆய்வாளர்கள் அகிலன், ஆதிலட்சுமி ஆகியோர் மாணவ-மாணவியருக்கு புத்தாடைகள், எழுதுப் பொருள்கள், பழங்களை வழங்கினர். சிறப்பாசிரியர் கவுரி நன்றி கூறினார்.
சங்ககிரியில்...
 பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் பொன்.தனராஜ் தலைமை வகித்து, ஜவாஹர்லால் நேரு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  ஆங்கில பட்டதாரி ஆசிரியர் எஸ்.அசோக்குமார் வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு மாறுவேடப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர் உமாமகேஸ்வரி, குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர் மா.முருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள் முத்துலட்சுமி, சாரதா, என்.கே.சதாசிவம், கோகிலா, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com