சங்ககிரியில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
சங்ககிரி அருகே உள்ள ஐவேலி பகுதிகளில் உள்ள தனியார் லாரி பழைய டயர்கள் விற்பனை செய்யும் கடைகள், டயர்கள் இருப்பு வைத்துள்ள கிடங்குகள், லாரி பட்டறைகள் ஆகியவற்றில் உள்ள பழைய டயர்கள், பொருள்களில் மழைநீர் மற்றும் தண்ணீர் ஊற்றப்பட்டு நீண்டநாள்களாக வைத்துள்ளனரா என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஆய்வு செய்தார்.
அதனையடுத்து, சங்ககிரி புதிய அரசு போக்குவரத்து பணிமனையில் ஏலம் விடக்கூடிய நிலையில் உள்ள பழைய பேருந்துகள், டயர்கள் வைத்துள்ள இடங்கள் முழுவதும் ஆய்வு செய்தார். அதில் பழைய டயர்களில் மழைநீர், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், பழைய பேருந்துகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சின்னாகவுண்டனூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தடுப்பு களப் பணியாளர்கள் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கிராம மக்களிடத்தில் டெங்கு தடுப்புப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், சின்னாகவுண்டனூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர் அப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர், தமிழகம் குறித்த பொது அறிவுடன், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள், பணியாற்றும் உயரதிகாரிகள் குறித்தும் விரிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின் போது,  மாவட்ட  ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், வட்டாட்சியர் கே.அருள்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜெயசீலன், சின்னாகவுண்டனூர் அரசு உயர்நிலைப் பள்ளி பிடிஏ தலைவர் கருப்புசாமி, தலைமையாசிரியர் கருணாகரன்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com