"பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்'

பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் அலுவலகங்களை மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சுற்றி காண்பித்தார்.
ஆட்சியர் அலுவலக அறை, அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டரங்கம், காணொலிக் காட்சிக் கூடம், மனுக்கள் பெறும் இடத்தை சுற்றி காண்பித்து ஆட்சியர் விளக்கமளித்தார்.
மேலும், மாணவ, மாணவியரின் பல்வேறு கேள்விகளுக்கு ஆட்சியர் பதில் அளித்தார். பின்னர் அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதுகுறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலம் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி காண்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும். குழந்தைகள் கல்வி அறிவோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு தங்கள் வாழ்வின் குறிக்கோளை அடையச் செய்ய இது மிக சிறந்த வாய்ப்பாக அமையும்.
சிறுவயதிலேயே நாட்டின் வளர்ச்சிக்கு நமது பங்கு என்ன என்பதை அரசுப் பள்ளிக் குழந்தைகள் தொலைநோக்குடன் சிந்திக்கின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.
அவர்களுக்கு கல்வியுடன் இதுபோன்ற வெளி உலக நடவடிக்கைகளை அதிகளவில் தெரிந்துகொள்ள பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, எதிர்காலத்தில் தலைசிறந்தவர்களாக திகழ செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com