37 ஆண்டுகளுக்கு பின்னர் பெருமாள் மலையில் ஊற்று நீர்

தம்மம்பட்டி பெருமாள் மலையில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஊற்றுநீர் பெருக்கெடுத்தது.

தம்மம்பட்டி பெருமாள் மலையில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஊற்றுநீர் பெருக்கெடுத்தது.
பெருமாள் மலை எனப்படும் கோவிந்தராஜா பெருமாள் கோயில் மலை மீது பெருமாள் சன்னிதி உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலையில் இருந்து  நீர் ஊற்று  பெருக்கெடுத்து ஓடுகிறது.
மலைப் பகுதியில் கண்ணாடி போல்  உள்ள அந்த நீரை, மூலிகை நீராகவே கருதி மலைக்கு வரும் பக்தர்கள், பாட்டில்கள் தீர்த்தமாக எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து  பக்தர் குணா கூறியதாவது:-
இந்த நீருற்று 37 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தது. அதன்பிறகு தற்போது வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com