சங்ககிரியில் மத்திய அதிவேக விரைப்படை வீரர்கள் ஆய்வு

இளம்பிள்ளை, இடங்கணசாலை, மகுடஞ்சாவடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் குற்றங்கள் எதுவும் நடக்கமால்இருக்க முன்னெச்சரிக்கை

இளம்பிள்ளை, இடங்கணசாலை, மகுடஞ்சாவடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் குற்றங்கள் எதுவும் நடக்கமால்இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக மத்திய சிறப்பு அதிவேக விரைவுப்படை (ஆர்எஎம்) வீரர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள்,  வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதிகள்,  சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவசர காலங்களில் தேவை ஏற்பட்டால் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது குறித்து 105-ஆவது பட்டாலியன் குழு உதவி  கமெண்டர் இளங்கோவன் தலைமையில் 50  பேர் ஆய்வு நடத்தினர்.   மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜரணவீரன் உடனிருந்தார்.
இந்த வீரர்கள் சேலம் மாவட்டம் முழுதுவம் ஒரு வாரம் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளதாக உதவி கமெண்டர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com