சோனா கல்லூரியில் அக். 8, 9-இல் விண்வெளி வார விழா -கண்காட்சி

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், இஸ்ரோ அமைப்பின் சார்பாக விண்வெளி வார விழா- விண்வெளி கண்காட்சி அக்டோபர் 8,  9 ஆம் தேதிகளில்  நடைபெற உள்ளது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், இஸ்ரோ அமைப்பின் சார்பாக விண்வெளி வார விழா- விண்வெளி கண்காட்சி அக்டோபர் 8,  9 ஆம் தேதிகளில்  நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சோனா கல்லூரி துணை தலைவர் தியாகு வள்ளியப்பா கூறியது:-
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக இஸ்ரோ அமைப்பின் விண்வெளி வார விழா, கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் விஞ்ஞான நிகழ்வாக இஸ்ரோ ராக்கெட்டரி கண்காட்சி ,  எதிர்கால திட்டங்கள்,  மாணவர்களுக்கான விண்வெளி வினாடி வினா, சுவரொட்டி,  கட்டுரை  எழுதுதல் போட்டிகள், விண்வெளி பயன்பாடு வீடியோக்கள், கல்வி மற்றும் அறிவியல் விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றார்.
பேட்டியின்போது கல்லூரி முதல்வர் உஷா,   கார்த்திகேயன், இயக்குனர் கௌசிக், பேராசிரியர் ஜெகதிஷ்வரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com