சேலத்தில் இலவச காய்ச்சல் மருத்துவ உதவி எண் சேவை: ஆட்சியர் தொடக்கி வைப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா காய்ச்சல் மருத்துவ உதவி எண் செயல்பாட்டை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தொடக்கி வைத்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா காய்ச்சல் மருத்துவ உதவி எண் செயல்பாட்டை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தொடக்கி வைத்தார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கட்டணமில்லா காய்ச்சல் மருத்துவ உதவி எண் 1800 425 2424 செயல்பாட்டை தொடங்கி வைத்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
மாவட்டம் முழுவதும் 20,000 பணியாளர்கள்  தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு சாதாரண காய்ச்சலுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், காய்ச்சல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட பொது மக்களின் சந்தேகங்களுக்கு உதவி செய்யும் வகையில்  காய்ச்சல் மருத்துவ உதவி கட்டணமில்லா 24 மணிநேரம் செயல்படக்கூடிய எண் 1800 425 2424 தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த எண் மேற்கூறிய வகையில் உடனடியாக செயல்பாட்டில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் காய்ச்சல் குறித்த எந்தவித சந்தேகம் ஏற்பட்டாலும் மேற்குறிப்பிட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இருந்து வந்துள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் இப்பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்காக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட காய்ச்சல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கால நேரம் பார்க்காமல் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை பூரண குணமடைய செய்து அவர்களை நல்ல முறையில் இல்லம் திரும்பும் வகையில் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com