வாழப்பாடி பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

வாழப்பாடி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி மங்கம்மா நகர், காளியம்மன்நகர், பாட்டப்பன் நகர், அண்ணாநகர் மற்றும் புதுப்பாளையம், துக்கியாம்பாளையம், பேளூர், சிங்கிபுரம், கொட்டவாடி, மத்tதூர், புத்திரகவுண்டன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தி செய்யும் சூளைகள் உள்ளன.
இப்பகுதிகளில் உற்பத்தியாகும் செங்கற்கள்  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகர்ப்புற கட்டுமானப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால், செங்கல் உற்பத்தி தொழிலை நம்பி 5,000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, செங்கல் சூளைகளுக்கு செம்மண், எரிபொருளாக பயன்படுத்தப்படும் விறகு ஆகியவற்றை வழங்குதல், செங்கற்களை பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் ஏற்றி சென்று இறக்குதல் உள்ளிட்ட பணிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் செங்கல் சூளை பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் செங்கல் அறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் கரைவதை தடுப்பதற்காக அறுக்கப்பட்ட பச்சை செங்கற்களை தார்ப்பாய் போட்டும், செங்கல் சூளை உரிமையாளர்கள் மூடி பாதுகாத்து வருகின்றனர். ஏற்கனவே அறுத்து வைக்கப்பட்டுள்ள செங்கற்களையும், விறகு தீமூட்டி சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்துவதற்கும் முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் செங்கற்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரூ. 4,000 முதல் ரூ. 4,500 வரை விலை போன 1000 செங்கற்கள், கடந்த சில தினங்களாக ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை விலை போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com