இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்

தலைவாசலை அடுத்த புத்தூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை செயல்முறை விளக்கமளித்தனர் .

தலைவாசலை அடுத்த புத்தூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை செயல்முறை விளக்கமளித்தனர் .
புத்தூர் ஊராட்சியில் விவசாயப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் இயற்கை வேளாண்மை (பஞ்சகவ்யம்)  செயல்முறை விளக்கமளித்தனர்.
 இதில் மாணவர் செல்வக்குமார் பேசுகையில், இயற்கை விவசாயி நம்மாழ்வார் கூறியபடி,  நெய் 1 கிலோ, பால் 2 லிட்டர், தயிர் 2லிட்டர், மாட்டு கோமியம் 5 லிட்டர், மாட்டு சாணம் 5 கிலோ அனைத்தையும் நன்றாகக் கலக்க வேண்டும். 15 நாள்களுக்கு பிறகு அவற்றை வடிகட்டி 300 மிலி பஞ்சகவ்யத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் என்றார். இதன் பயன்களை மாணவர் அரவிந்த் ராகவன் விளக்கினார். இவற்றைப் பின்பற்றுவதால் குறைந்த செலவில் அதிக லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றனர். மேலும் இதைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடாமல்இருக்கும். மண்வளம் பாதுகாக்கப்படும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரியன், சுதர்சன், வினோத், சுசில் பிரசாத், மனோஜ், மோகன்தாஸ், ஜெயக்குமார், கவியரசன், மனோஜ் ரஞ்சன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com