ஏற்காடு மலை கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் காட்டெருது காத்த பட்டான் கல் மற்றும் புலிக்குத்தி பட்டான் நடுக்கற்கள் ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழு தொல்லியல் ஆர்வலர் நீலகிரி ரா.கிருஷ்ணமூர்த்தியால்

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் காட்டெருது காத்த பட்டான் கல் மற்றும் புலிக்குத்தி பட்டான் நடுக்கற்கள் ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழு தொல்லியல் ஆர்வலர் நீலகிரி ரா.கிருஷ்ணமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் நாகம்மன் காடு என்ற பகுதியில் அருணாசலத்துக்கு சொந்தமான நிலத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுக்கற்கள் உள்ளன. இக்கிராமத்தில் ஒரே கல்லில் வீரனின் சிற்பமும் காட்டெருதின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் போர் கவசமும், மார்பில் பெரிய பட்டையுடைய ஆபரணமும், கைகளின் மணிக்கட்டில் ஒரு வளையமும், மேல் கையில் இரண்டு வளையங்களும், இடுப்பில் வாளுடன் கூடிய கச்சையும், போர் உடை உடுத்தியது போன்ற வீரனின் உருவம் செதுக்கப்பட்டள்ளது.
மேலும் வீரனின் இடது கை எருதின் அருகிலும், விலங்கின் மீதுள்ள அச்சத்தால் வலது கை கோடாரி ஏந்தியவாறும் உள்ளது. இதில் உள்ள விலங்கு காட்டெருது என்பதும், இந்த நடுக்கற்கள் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், எல்லைப்புற பழங்குடிகள் காட்டு விலங்குகளை பழகி விற்பது தொழிலாக இருந்துள்ளது.
வனத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் காட்டெருதுகளைக் காக்கும் பொருட்டு ஏற்பட்ட போரில் விழுப்புண் பட்டு வீரன் இறந்துள்ளார்.அவரின் நினைவாக இந்த நடுக்கல் கூடார உட்பகுதியில் அமைந்துள்ளது. இதன் வாயில் பகுதி இரண்டுபுறத்திலும் நாகங்களின் சிலைகள் நடப்பட்டுள்ளதாகவும், மேலும் இதன் அருகில் புலிக்குத்தி பட்டான் நடுக்கல் உள்ளது. இக்கல்லில் வீரன் புலியின் மார்பில் ஈட்டி பாய்ந்தபடி செதுக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு புலியைக் கொன்று விழுப்புண்பட்டு இறந்திருப்பார் எனறும், இவரின் நினைவாக இக்கற்கள் நடப்பட்டுள்ளன.
இந்த வீரனின் தலையில் கவசமும் பெரிய காதும் செதுக்கப்பட்டுள்ளது. இக்கற்கள் பாதியளவுக்கு மண்ணில் புதைந்த நிலையில் வேர்களின் இடையில் சிக்கிக் காணப்பட்டிருந்தன.
இக்கிராமத்தில் நடுக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com