கற்றல், கற்பித்தல் பயிற்சி பெற ஏ.ஜி.என். பள்ளி ஆசிரியர்கள் ஆஸ்திரேலியா பயணம்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள ஏ.ஜி.என். பள்ளி ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி பெறுவதற்காக

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள ஏ.ஜி.என். பள்ளி ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி பெறுவதற்காக
வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் சென்றனர். இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ஆஸ்திரேலியாவில்
உள்ள அடிலைட் பார்க்ஸ் ரோட்டரி சங்கம், ஏ.ஜி.என். பள்ளியில் கல்வி பயிலும் 9 முதல் முதல் 12 வகுப்பு வரையிலான 16 ஏழை மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் ஏற்று அம்மாணவர்கள் கல்விப் பயில உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரித்திடவும், கலாசாரப் பகிர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் அடிலைட் பார்க்ஸ் ரோட்டரி சங்கம், ஆஸ்திரேலிய அரசின் அனுமதி
பெற்று ஏ.ஜி.என். பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
இந்த நிலையில் இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள பள்ளித் தாளாளர் சரஸ்வதி கவுண்டன் தலைமையில் ஆசிரியர்கள் மனோரஞ்சிதம், ரமாதேவி, சித்ரா ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. இவர்கள், அக்டோபர் 8-ஆம் தேதி வரை அந்நாட்டில் தங்கி, ஆஸ்திரேலிய புலமைக் கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டதின் கீழ் அங்குள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை பார்வையிடுவதுடன், கல்வி மற்றும் கலாசார பரிமாற்றக் கருத்தரங்கங்களில் பங்கு கொள்கின்றனர். முன்னதாக ஆஸ்திரேலியா நாட்டுக்குச் சென்ற ஆசிரியர் குழுவைப் பள்ளி மாணவர்கள் வழியனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com