சேலத்தில் தூய்மையே சேவை பிரசார ரதம் இன்று தொடக்க விழா: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் சூரமங்கலம் ஜவஹர் திடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) நடைபெறும் விழாவில் தூய்மையே சேவை பிரசார ரதத்தை தொடக்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் சூரமங்கலம் ஜவஹர் திடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) நடைபெறும் விழாவில் தூய்மையே சேவை பிரசார ரதத்தை தொடக்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி, சென்னையில் தூய்மையே சேவை பிரசார ரதத்தை செப்.15 இல் தொடக்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து, சேலம் , ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களின் தூய்மையே சேவை பிரசார ரதத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கி வைக்கிறார்.
மாவட்டங்களில் தூய்மையே சேவை பிரசாரம் செப்.15 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தலைமையிலும், வட்டாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும், ஊராட்சிகளில் மண்டல அலுவலர்களின் தலைமையிலும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தூய்மையே சேவை பிரசார உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் , ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் தூய்மையே சேவை பிரசார ஒளி - ஒலி விழிப்புணர்வு ரதங்களை முதல்வர் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.
மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மையே சேவை பிரசார ஒளி-ஒலி விழிப்புணர்வு வாகன ரதம் தொடக்கி வைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரத்திற்கு ஓர் ஊராட்சியில் பொது மக்கள் மத்தியில் முக்கிய பிரமுகர்களைக் கொண்டு தனிநபர் இல்லக் கழிவறை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படும்.
சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மஸ்தூர்களைக் கொண்டு பள்ளி, மருத்துவ வளாகங்களும், தன்னார்வலர்களைக் கொண்டு அங்கன்வாடிகள் , பள்ளிகள் , கல்லூரிகள், விடுதிகளும், அனைத்து ஊராட்சிகளிலும் பொது மக்கள் ஒத்துழைப்புடன் சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நீர் நிலைகளும் தூய்மைப்படுத்தப்படும்.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களைக் கொண்டு ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் இதர மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களும், தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், இளைஞர்கள் , பாதுகாப்பு ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், மகளிர் மற்றும் எஸ்.பி.எம். தூதுவர்களைக் கொண்டு பொது இடங்களும் தூய்மைப்படுத்தப்படும்.
செப்டம்பர் 25 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களான மருத்துவமனைகள், பூங்காக்கள், சிலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், கழிவறைக் கட்டும் பணிகள் மேற்கொண்டு ஆவணப்படுத்தப்படும்.
செப்.26 ஆம் தேதி முதல் அக்.1 ஆம் தேதி வரை சுற்றுலா மற்றும் புனிதத் தலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் துணை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
அக்.2 ஆம் தேதி திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்க தயார் நிலையில் உள்ள ஊராட்சிகளை கிராம சபைக் கூட்டத்தில் திறத்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com