சேலத்தில் இருந்து விரைவில் 2 விமானங்கள் இயக்கம்: எம்.பி. வி.பன்னீர்செல்வம்

சேலத்தில் இருந்து விரைவில் இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சேலத்தில் இருந்து விரைவில் இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் சிறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விமானங்களை இயக்க மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி, இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஒரு விமானம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை, பெங்களூரு வழியாக சேலம் வந்தடையும். பின்னர் மீண்டும் புதுச்சேரிக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொரு விமானம் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை, சோதனை அறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான அறைகள் பராமரிப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் விமானங்கள் இயக்கப்படும்.
சேலம் விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து விமானம் இயக்கப்படும் பட்சத்தில் தொழில் வளர்ச்சி பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com