திருநங்கைகளுக்கான கழிப்பிடம் திறப்பு 

ஓமலூர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகப் பூட்டியிருந்த திருநங்கைகளுக்கான சிறப்பு கழிப்பறை மற்றும் குளியலறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 

ஓமலூர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகப் பூட்டியிருந்த திருநங்கைகளுக்கான சிறப்பு கழிப்பறை மற்றும் குளியலறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
 ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளது. அவற்றை பயணிகள் பயன்படுத்திவரும் நிலையில் திருநங்கைகள் அந்த இரண்டையுமே பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர். ஓமலூர் வட்டாரத்தில் உள்ள சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உட்பட சேலம் மாவட்டத்தில் சுமார் 2500 திருநங்கைகள் உள்ளனர். இந்த நிலையில் திருநங்கைகள் பயன்பெரும் வகையில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தனி கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து திருநங்கைகள் மட்டும் பயன்படுத்த கூடிய வகையில் கழிவறை,குளியலறையுடன் ஓமலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்டது. இந்தக் கழிவறையில் மின் விளக்கு வசதி, 24 மணி நேரம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தக் கழிப்பிடம் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கபடாமலே இருந்தது. இதைத் திறக்கக் கோரி திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் ஓமலூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். வெற்றிவேல் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான கழிப்பறையைத் திறந்து வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com