மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் 

கெங்கவல்லி அருகே மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். 

கெங்கவல்லி அருகே மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
 கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுவேத நதிக்கரையில் மணல் திருட்டு நடப்பதாக ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் செல்வனுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து , அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் பரசுராமன் ஆகியோர் கெங்கவல்லி பகுதிகளில் இரவு நேரங்களில் கடந்த இருநாள்களாகஆய்வு பணி மேற்கொண்டனர்.
 அப்போது ஆணையாம்பட்டி சுவேத நதிக்கரையில் டிராக்டரில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.அவர்களைப்பிடித்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் டிராக்டர் ஓட்டிவந்து,மணல் அள்ளியது ஆணையாம்பட்டி பேரறிவாளன் என்பது தெரியவந்தது. அந்த டிராக்டரை பறிமுதல் செய்து, பேரறிவாளன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், 74.கிருஷ்ணாபுரம் நதிக்கரையில், மணல் அள்ளிய ரமேஷையும், அவரது டிராக்டரையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கும் கோட்டாட்சியர் செல்வன், தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com