"தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்'

தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
காஷ்மீரில் ஆஷிபா என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கும் நடக்கக் கூடாது. இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களைக் கண்டறிந்து, 24 மணி நேரத்துக்குள் மரண தண்டனை வரை வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் எங்கும் நடைபெறாத வகையில் அளிக்கப்படும் இந்த தண்டனையை த.மா.கா.
வரவேற்கும்.
கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடுவான மே 3-ஆம் தேதி வரை த.மா.கா. போராட்டம் நடத்தும்.
தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மக்கள் விரும்பாத, மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முற்படுவதே காரணம் ஆகும். மக்களைப் பாதிக்கும் திட்டங்களை அரசுகள் கைவிட வேண்டும்.
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்கள் கையாகப்படுத்துவது தேவையற்றது. இதேபோன்று தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான மாற்று ஏற்பாட்டு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றார்.
மறியலைக் கைவிடுமாறு வாசன்
அறிவுறுத்தல்: மேட்டூர்,  ஓமலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வாசன், ஓமலூர் பயணியர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளரிடம், த.மா.கா. சார்பில் 4 நாள்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென்று அனுமதி மறுத்ததால், த.மா.கா. நிர்வாகிகள் ஓமலூர்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த வாசன், போராட்டத்தை கைவிடுமாறு கூறினார்.  இதைத் தொடர்ந்து,  அவர்  உதவி செயற்பொறியாளரை சந்தித்து, "சில நிமிடங்கள் தங்குவதற்கு  அனுமதி கொடுத்தால் தங்குகிறேன். இல்லையென்றால், செல்கிறேன்'  என்றார்.  
இதையடுத்து,  அனுமதி வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com