தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு: கால்வாயை சீரமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரில் அரூர் சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரில் அரூர் சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறுகலான சாலையில் சிதைந்த நிலையிலுள்ள கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம்-அரூர் சாலையில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி தாதனூர் கிராமத்தில், அம்பேத்கர் காலனி அருகே குறுகலான சாலையோரத்தில் திறந்த நிலையிலுள்ள கழிவுநீர் கால்வாய் சிதைந்து கிடைக்கிறது. அதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி நெகிழி குப்பைகளோடு சேர்ந்து குட்டையாக தேங்கியுள்ளது. அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 
அதனால், அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சிதைந்து போன கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். அரூர் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க,  திறந்துக் கிடக்கும் கால்வாயை சிமென்ட் கான்கிரீட் மேல்தளம் அமைத்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com