வாழப்பாடி பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

வாழப்பாடி பகுதியில் நீர்பாசன வசதி கொண்ட விவசாயிகள், சமீப காலமாக சின்ன வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் நீர்பாசன வசதி கொண்ட விவசாயிகள், சமீப காலமாக சின்ன வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தக்காளி உள்ளிட்ட நாட்டு ரக காய்கறிகள் மட்டுமின்றி, முட்டைகோஸ், முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட் ஆகிய காய்கறிகள் சாகுபடியில் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 
குறிப்பிட்டு சொல்லும் அளவில் நீர்பாசனத் திட்டங்கள் ஏதுமில்லையென்றாலும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து கிணற்றுப் பாசன முறையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 
சின்ன வெங்காயத்துக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதாலும், ஒரு சில நேரங்களில் ஒரு கிலோ ரூ.100 வரை விலை போவதாலும், நீர்பாசன வசதி கொண்ட வாழப்பாடி பகுதி விவசாயிகள் பலர் சமீப காலமாக சின்ன வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் சிங்கிபுரம் பழனியாபுரம், முத்தம்பட்டி, சேசன்சாவடி, விலாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனியாபுரம் விவசாயி முத்துசாமி கூறியது: குறுகிய கால பயிரான சின்ன வெங்காயத்துக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் நல்ல விலை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, அறுவடை செய்வதற்கு முன் அதன் தாழ்களை அறுத்து கீரையாக விற்பனை செய்வதால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மற்ற காய்கறிகளை அறுவடை செய்த ஓரிரு தினங்களில் விற்பனை செய்யாவிட்டால் அழுகி வீணாகி விடும். ஆனால் சின்ன வெங்காயத்தை ஒரு மாதம் வரை கூட விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பில் வைத்திருக்க முடியும். 
எனவே, சின்ன வெங்காயத்தை பயிரிடுவதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com