வீடு, கல்வி நிறுவனங்களில் மின் உற்பத்தி சாதனம் அமைக்க30 சதவீத மானிய உதவி

வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது: கான்கீரிட் வீடுகள், தனியார் தொண்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் என்.ஜி.ஓ. மூலம் இயங்கும் மருத்துவமனைகளில் சூரிய மின் உற்பத்தி  சாதனம் அமைக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் மரபு சாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது  மத்திய அரசு சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் கட்டடங்களின் மேற்கூரையில் நிறுவ 30 சதவீதம் மானியம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் சூரிய ஒளி மின் சாதனம் முலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சூரிய ஒளி சாதனத்தை அமைப்பவர்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்துக்கு நெட் மீட்டர் மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது  குறைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார தேவைக்கேற்ப 1 கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம்.
மானியத்தை பெற அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்.ஜி.ஓ. மூலம் இயங்கும் மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், விடுதிகள் போன்றவை தகுதியானவையாகும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள்  சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் 2-ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமையில் உரிய ஆலோசனைகளை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 7708064718, 7708060307 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது  ‌s‌l‌m@‌t‌e‌d​a.‌i‌n மின்அஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு சூரிய மின்சக்தி உற்பத்தி  மற்றும் மானியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com