வெயிலின் தாக்கத்தால் அதிகளவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள்

ஆத்தூரில் வெயிலின் தாக்கத்தால் மண்பாண்ட பாத்திரங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. 

ஆத்தூரில் வெயிலின் தாக்கத்தால் மண்பாண்ட பாத்திரங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. 
சேலம் மாவட்டம், ஆத்தூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் மண்பாண்ட சமையல் மற்றும் குளிர்ந்த நீரை அருந்த மண் பானை மற்றும் மண்பாண்டங்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மண் பானை மட்டுமே வைத்திருந்த நிலையில், அழகிய மண்பாண்டத்தில் சமையலறையை அழகுபடுத்த வந்திருக்கும் மண்பாண்ட சமையல் பானைகள், சாப்பாட்டு மேஜையை அலங்கரிக்க மண்பானை தொட்டி, ஜக்கு, டம்ளர் மற்றும் துளசி மாடம் ஆகியன அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நவீன காலத்தில் மண் பானை சமையல் மற்றும் பாத்திரங்களை உபயோகப்படுத்த அதிகளவில் பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com