கல்வராயன்மலையில் ரூ.7 கோடி மதிப்பில் தார்ச்சாலை: மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

கல்வராயன்மலையில் சாலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைவாழ் மக்கள் மண் சாலை அமைத்து வந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 7 கோடி செலவில் தார்ச் சாலை அமைக்கப்பட்டதால்

கல்வராயன்மலையில் சாலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைவாழ் மக்கள் மண் சாலை அமைத்து வந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 7 கோடி செலவில் தார்ச் சாலை அமைக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கல்வராயன் மலையில் மொரசம்பட்டி- மண்ணூர் இடையே ரூ. 7 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கப்பட்டது.
 கல்வராயன்மலையில் மேல்நாடு, கீழ்நாடு, மொரசம்பட்டி, மண்ணூர் உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தாங்கள் பயிரிடும் விளைபொருள்களை வாழப்பாடி மற்றும் ஆத்தூர் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் இருந்து வந்தது.
 மேலும் பயிலும் மாணவ, மாணவிகள் பேருந்து வசதி இல்லாமல் தவித்து வந்தனர்.
 வெகு தூரம் நடந்து சென்று பேருந்தைப் பிடித்துச் சென்று வந்தனர். மேலும் நோயாளிகள்,விஷப் பூச்சிகள் கடித்தால் அவசரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தோளில் வைத்து நான்கு பேர் சுமார் 5 கிலோ மீட்டர் தூக்கி வரும் சூழ்நிலை இருந்து வந்தது.
 இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மொரசம்பட்டி முதல் மண்ணூர் வரை சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைக்க முயன்றனர். மேலும் மாவட்ட ஆட்சியருக்கும் சாலை வசதி கேட்டு பல முறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகினி ராம்தாஸ் முயற்சியால் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தீர்வு காணப்பட்டது.
 இந்நிலையில் மொரசம்பட்டி முதல் மண்ணூர் வரை தார்ச் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
 இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com