தகவல் பரிமாற்றம் எளிமையாக்கப்பட வேண்டும்: துணைவேந்தர் பேச்சு

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், தகவல் பரிமாற்றம் எளிமையாக்கப்பட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் தெரிவித்தார்.

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், தகவல் பரிமாற்றம் எளிமையாக்கப்பட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் தெரிவித்தார்.
 பெரியார் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர்களுக்காக இருநாள் புத்தாக்கப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஆங்கிலத் துறை சார்பில் நடத்தப்படும் பயிலரங்கின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. சங்கீதா வரவேற்றார். பயிலரங்கைத் தொடக்கி வைத்து துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் பேசியது:
 அலுவல் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் நேரம் மிச்சப்படுவதுடன் பணிகளும் துரிதமாக நடைபெறும். கோப்புகளைக் கையாளுவதில் அரசின் விதிமுறைகள் குறித்த தெளிவான பார்வையை பயிற்சிகள் மேம்படுத்தும்.
 அலுவலர்கள் உருவாக்கும் கோப்புகளில் ஆம், இல்லை என்று ஏதேனும் ஒரு முடிவெடுக்கும் அதிகாரம் மட்டுமே உயர் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.எனவே, கோப்புகளை சரியான முறையில் நம்பகத்தன்மைமிக்கதாக கீழ்நிலை அலுவலர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் தொடர் முயற்சியால் புதிய பாடங்களையும், அவ்வப்போது நவீனப்படுத்தப்படும் பாடத் திட்டங்களையும் கற்றுக் கொண்டு கற்பிப்பது போல நிர்வாகப் பணியாளர்களும் அவ்வப்போது நிர்வாக நடைமுறைகள், புதிய விதிகளை அறிந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 வெளிப்படையான நிர்வாகம், சீரான வேகத்தில் நடக்க, நிர்வாகப் பணியாளர்கள் முதன்மைக் காரணமாக உள்ளனர்.எனவே, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய கோப்புகள் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்க வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜோசப் அருள்ராஜ், எழுத்தாற்றல் உத்திகள் குறித்து நிர்வாகப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com