குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
 1 வயது முதல் 19 வயது வரை உள்ளோர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளவேண்டும். இதன் மூலம், கொக்கிப்புழு , கீரைப்பூச்சி, நாடாப் புழுக்களால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, பலகீனம், வாந்தி, சீதபேதி, வயிற்றுப்போக்கு, ரத்தச்சோகை போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் வருடந்தோறும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அரசால் வழங்கப்படுகிறது. தேசிய குடற்புழு நீக்க நாளாக ஆகஸ்ட்10-ஆம் தேதியும், வரும் 17-ஆம் தேதி வரை குடற்புழு நீக்க வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, பச்சமலை, கூடமலை, தெடாவூர், செந்தாரப்பட்டி ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள்பட்ட, கெங்கவல்லி ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள ஒரு வயது முதலான குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ,மாணவியர் என்று கெங்கவல்லி ஒன்றியத்தில் மொத்தம் 42,216 பேர் உள்ளனர்.
 இவர்கள் அனைவருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி ஆசிரியைகள், பள்ளி ,கல்லூரி ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பூங்கொடி உத்தரவின்பேரில், கெங்கவல்லி ஒன்றிய மருத்துவ அலுவலர் தம்மம்பட்டி வளர்மதி தலைமையில் குடற்புழுநீக்க மாத்திரைகள் வெள்ளிக்கிழமை 30 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் ,வழங்கப்பட்டது.எஞ்சியுள்ளவர்களுக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com