அறிவுக்கான தேடல் எப்போதும் இருந்தால் தான் வளர்ச்சி காண முடியும்: வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார்

அறிவுக்கான தேடல் எப்போதும் இருந்தால் வளர்ச்சி காண முடியும் என வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் பேசினார்


சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் 2018 - 2019ஆம் கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் வழக்குரைஞர் த.சரவணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் படித்து நாட்டின் முதல் திருநங்கை வழக்குரைஞராக தமிழ்நாடு பார்கவுன்சலில் பதிவு செய்த சத்யஸ்ரீ சர்மிளா கௌரவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும், ரூ.15,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய வழக்குரைஞர் சத்ய சர்மிளா, திருநங்கை வழக்குரைஞர் என்ற பெருமையை அடைவதற்கு பல சோதனைகளையும், போராட்டங்களையும் கடந்தே வர முடிந்தது என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் பேசியது:
தோல்விகளில் இருந்து தான் வெற்றிகளை ஈட்ட முடியும். பிரச்னைகளை முறையாக எதிர்கொண்டு அவற்றை வாய்ப்புகளாக மாற்றுவதில்தான் ஒவ்வொருவரின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.
மனிதத் தவறுகள் மலிந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதனை எதிர்கொண்டு பெரும் சாதனையாளர்களாக மாறச் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. அறிவுக்கான தேடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும்.
எப்போதும் உயரிய இலக்குகளையே குறிக்கோள்களாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே நமது ஆற்றல்களை அடக்கிவிட கூடாது என்றார்.
விழாவில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.மாணிக்கம், கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com