ஓமலூர் - திருச்செங்கோடு சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

ஓமலூரில் இருந்து சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை ரூ.539 கோடி செலவில் 54 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை மற்றும் இரண்டு வழித்தடச்


ஓமலூரில் இருந்து சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை ரூ.539 கோடி செலவில் 54 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை மற்றும் இரண்டு வழித்தடச் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தாரமங்கலம் பகுதியில் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் 13 நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.6,448 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 62,017 கி.மீ. நீளமுள்ள சாலைகள் உள்ளன. இதில் முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, மாநில சாலைகளில் 654 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கான அறிக்கை தயாரித்து தனியார் நிறுவனத்திடம் நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்தது. இந்த திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் 13 மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ரூ.6,448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.539 கோடி செலவில் 54 கி.மீ. நீளமுள்ள ஓமலூர் - திருச்செங்கோடு சாலை விரிவாக்கம் செய்து அமைக்கப்படுகிறது. ஓமலூரில் இருந்து சங்ககிரி வரை நான்கு வழிச்சாலையாகவும், சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு வரை இரண்டு வழிச்சாலையாகவும் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ஓமலூர் சங்ககிரி சாலைகள் அகலப்படுத்தும் அளவீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையோரங்களில் தனியாரிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தாரமங்கலம் நகரப் பகுதியில் புதிய சாலை செல்லாமல், புறநகர் வழியாக நிலம் கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒருவர் கூறும் போது, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் 654 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த சாலைகளின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தும் வகையில் தனிப்பாதை அமைக்கப்படுகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி மூலம் இந்த 13 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பட்டுப் பணிகள் முடிந்த பிறகு, அந்த சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அந்த சாலைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com