சுகவனேசுவரர் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரர் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது


ஆடி அமாவாசையை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரர் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் சுகவனேசுவரர் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோயில் நந்தவனத்தில் வாழை இலையில் பூ, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, கத்தரிகாய், பூசணிக்காய், அவரை, வெண்டைக்காய், புடலங்காய்,வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை வைத்தனர். அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க, தர்ப்பணம் கொடுப்பவர்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டினர். பின்னர் எள், சாதத்தால் கலந்த உணவை காகங்களுக்கு வைத்து வழிபட்டனர்.
அதேபோல மேட்டூர் காவிரிக் கரையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளியூர்களில் இருந்தும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com