மழை வேண்டி மலை உச்சியில் கன்னிமார் கோயிலில் சிறப்பு பூஜை

வாழப்பாடியை அடுத்த கோதுமலை அடிவாரத்தில் உள்ள மாரியம்மன்புதுôர் கிராம மக்கள், மழை வேண்டி 5 கி.மீ. துôரத்தில் கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் கோயிலுக்கு சென்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர்.


வாழப்பாடியை அடுத்த கோதுமலை அடிவாரத்தில் உள்ள மாரியம்மன்புதுôர் கிராம மக்கள், மழை வேண்டி 5 கி.மீ. துôரத்தில் கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் கோயிலுக்கு சென்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர்.
வாழப்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழையில்லாததால், கிராமங்களில் வறட்சி தலை துôக்கியுள்ளது. பயிர் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். கிராமங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. அதனால் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாரியம்மன்புதுôர் கிராம மக்கள், முன்னோர்கள் வழக்கப்படி கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்திட முடிவு செய்தனர்.
பூஜை பொருள்களோடு குதிரையை அலங்கரித்து அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து திரண்ட கிராம மக்கள், ஏறக்குறைய 5 கி.மீ. துôரத்தில், கோதுமலை உச்சியிலுள்ள கன்னிமார் கோயிலுக்கு சனிக்கிழமை சென்றனர். மழை வேண்டி பூஜை நடத்திய கிராம மக்கள், கோயில் வளாகத்தை விட்டு வெளியேறி, ஒத்தையடி மலைப்பாதையில் கிராமத்திற்கு திரும்பியபோது எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்ததால், தங்களது வேண்டுதல் நிறைவேறியதாக கருதி மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com