மேட்டூரில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

மேட்டூர் காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.


மேட்டூர் காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 1.40 லட்சம் கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் போக்கி, நீர் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் போக்கி பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரிக் கரையில் சில இடங்களில் வாழைகள், தென்னைகள் நீரில் மூழ்கின. தங்கமாபுரிபட்டினத்தில் ஒரு பகுதியில் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வெள்ளம் செல்கிறது. இந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
தங்மாபுரிபட்டினம் அண்ணாநகரில் பத்து வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. அதனால் அந்தப் பகுதி மக்கள் மேட்டூர் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் செய்தியாளர்களிட கூறும்போது, சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையோரமாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உணவு, உடை, மற்றும் அடிப்படைத் தேவைகள் செய்து தரப்படுகின்றன. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் கீழ் பகுதியில் உள்ள 12 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே காவிரிக் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதிகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தொடர்ந்து காவிரிக் கரையோரப் பகுதி கண்காணிக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com