மக்கள் நீதிமன்றத்தில் 2,046 வழக்குகளில் ரூ. 17.38 கோடிக்கு சமரசத் தீர்வு

சேலம் மக்கள் நீதிமன்றத்தில் 2,046 வழக்குகளில் ரூ. 17.38 கோடிக்கு சமரசத் தீர்வு எட்டப்பட்டது.


சேலம் மக்கள் நீதிமன்றத்தில் 2,046 வழக்குகளில் ரூ. 17.38 கோடிக்கு சமரசத் தீர்வு எட்டப்பட்டது.
சேலம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பி.மோகன்ராஜ் துவக்கி வைத்தார். இதில் குடும்ப நலன், கல்விக் கடன், நில தகராறு தொடர்பான 11,591 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் 22 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. இதில் 2,046 வழக்குகளில் ரூ. 17.38 கோடிக்கு சமரசத் தீர்வு எட்டப்பட்டது. இதில், முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி குணவதி, நீதிபதிகள் எழில், தாண்டவன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி வி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆத்தூரில்
ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றத்தில் அதன் தலைவர் சார்பு நீதிபதி முனுசாமி தலைமையில் லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது யூசுப் ரிஸ்வானுல்லா, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 சிவக்குமார், நடுவர் நீதிமன்றம் எண் 2 உமா மகேஸ்வரி, ஓய்வுபெற்ற மாவட் ட நீதிபதி ராஜேந்திரன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் டி. வெங்கடேசன், என். ராமதாஸ், சி. ராஜேந்திர மகாஜன், ராமமூர்த்தி மற்றும் பல வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 300 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டதில் அனைத்தும் முடிக்கப்பட்டு ரூ. 81 லட்சத்து 38 ஆயிரத்து 650 வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com