அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

ஆத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஆத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி ராமலிங்க வள்ளலார் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன், விநாயகர், வீரபத்திரர், பாவாடைராயர் ஆலய நூதன ஜீரணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா சனிக்கிழமை கணபதி, லஷ்மி, நவக்கிரஹ ஹோமம், முளைப்பாலிகை ஊர்வலத்துடன் விசேஷசந்தி இரண்டாம் கால யாக பூஜை, லலிதா ஸ்ஹஸ்ர நாமம், பாராயணம் ஷண்ணவதி ஹோமம் ஆகியன நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கால யாக பூஜையுடன் தத்துவார்ச்சனை ஷண்ணவதீ ஹோமம் நடைபெற்று கடங்கள் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கூட்டுறவு வங்கித் தலைவர்ஆர்.இளங்கோவன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.காமராஜ், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, துளுவ வேளாளர் மகாஜன மன்றத் தலைவர் எஸ்.அருணாச்சலம், தொழிலதிபர்கள், ஆத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர்ஆர்.பொன்கார்த்திக்குமார், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தா.வரதராஜன், உதவி ஆணையர் தா.உமாதேவி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன், நகராட்சிஆணையர் க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை பருவதராஜகுல மீனவர் சமுதாய மக்கள்,திருப்பணி கமிட்டித் தலைவர் டி.குழந்தைவேல், துணைத் தலைவர் பி.மூர்த்தி மற்றும் நிர்வாக அறங்காவலர் பி.கங்காதரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக யாக பூஜைகளை கா.வேங்கடசுப்பிரமணிய சிவாச்சாரியார், அ.ஐயப்ப குருக்கள் நடத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com